...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 08/12/2018 18:09:43

 Latest News

மாணவர்களுக்கான வென்று காட்டுவோம் 2018-19 நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

| Starts On  2018-12-08 Ends On  2018-12-08 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் சகோதர சகோதரிகளே,

அல்லாஹ்வின் பேரருளால் நேற்று 02-12-18 ஞாயிறு அன்று முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் வைத்து வென்று காட்டுவோம் நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத்தின் தலைச்சிறந்த ஆசிரியர்கள், 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு, அரசுப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான வழிகாட்டுதல் மற்றும் குறிப்புகளை வழங்கினர்.

ஏறத்தாழ 700 பத்தாம் வகுப்பு மாணவர்களும், 350 பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர்களுக்கு மாதிரி வினா விடை புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பொருளாதாரத்தாலும் உடல் உழைப்பாலும் பங்களிப்பு செய்த அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவானாக!

நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.


- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)