...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளர் ஆகலாம்!
தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (தமிழ்நாடு மின்சார வாரியம்) விரைவில் 325 உதவி பொறியாளர்களை நேரடித் தேர்வு மூலம் தேர்வுசெய்ய உள்ளது. இதில் 300 காலியிடங்கள் எலெக்ட்ரிகல் இன்ஜினியரிங் பிரிவுக்கும், 25 இடங்கள் சிவில் இன்ஜினியரிங் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேரடி நியமனம்
மின்சார வாரியத்தில் எழுத்துத் தேர்வு மூலம் நேரடி நியமன முறையில் உதவி பொறியாளர்கள் தேர்வுசெய்யப்பட்டுப் பணியமர்த்தப்படுகிறார்கள். அந்த வகையில், 325 உதவிப் பொறியாளர்களை நேரடி தேர்வு மூலம் நியமிக்க மின்சார வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வை நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. எழுத்துத் தேர்வு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும். நேர்முகத் தேர்வு எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான தகுதி
உதவிப் பொறியாளர் (எலெக்ட்ரிகல்) பணிக்கு எலெக்ட்ரிகல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிகல் இன்ஸ்ட்ருமென்டேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங், இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்டவையில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ. அல்லது பி.டெக். பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி பொறியாளர் சிவில் பிரிவுக்கு பி.இ. சிவில் பொறியியலில் பட்டம் அவசியம்.
ஏ.எம்.ஐ.இ. தேர்ச்சி பெற்றவர்களும் உதவிப் பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டும் 30 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. உதவிப் பொறியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெகு விரைவில் வெளியிடப்பட உள்ளது. மின்சார வாரியத்தின் இணையதளத்திலும் (www.tangedco.gov.in) அறிவிப்பு வெளியாகும். நேரடியாக உதவிப் பொறியாளராகப் பணியில் சேருவோர் உதவி செயற்பொறியாளர், செயற்பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர், தலைமைப் பொறியாளர் எனப் படிப்படியாகப் பதவி உயர்வு பெறலாம்.
Source : தி இந்து - 11-07-17