...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 24/05/2018 10:02:16

 Latest News

எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு: மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

| Starts On  2018-05-24 Ends On  2018-05-27 | Author | Email

இன்று எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவு: மறுகூட்டலுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

 

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. மறுகூட்டலுக்கு நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்எஸ்எல்சி (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு கடந்த மார்ச் 18-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடந்தது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடிதேர்வு முடிவுகள் 23-ம் தேதி (இன்று) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன. தேர்வு எழுதிய பள்ளி மாணவமாணவிகளும்தனித் தேர்வர்களும் www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண்பிறந்த தேதியைக் குறிப்பிட்டு மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

எஸ்எம்எஸ் மூலம் தகவல்

மேலும்ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் (நிக் சென்டர்)அனைத்து மாவட்ட மையகிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

தேர்வு எழுதிய மாணவமாணவிகள்தனித் தேர்வர்கள் ஏற்கெனவே ஆன்லைனில் விண்ணப்பித்தபோது அளித்திருந்த செல்போன் எண்ணுக்குகுறுஞ்செய்தியாகவும் (எஸ்எம்எஸ்) தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

தற்காலிக மதிப்பெண் சான்று

பள்ளி மாணவமாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் வழியாகவும்தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை வரும் 28-ம் தேதி பிற்பகல் பெற்றுக்கொள்ளலாம். மாணவர்கள்தனித் தேர்வர்கள் அனைவரும் www.dge.tn.nic.in இணையதளத்தில் பதிவெண்பிறந்த தேதியைக் குறிப்பிட்டுதற்காலிக மதிப்பெண் சான்றிதழை தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதியவர்கள் எந்தவொரு பாடத்துக்கும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம். பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும்தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையம் வழியாகவும் மே 24-ம் தேதி (நாளை) முதல் 26-ம் தேதி மாலை 5.45 மணி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான கட்டணமாக மொழித்தாள்ஆங்கிலத் தாளுக்கு தலா ரூ.305, கணிதம்அறிவியல்சமூக அறிவியல்விருப்ப மொழிப்பாடம் ஆகியவற்றுக்கு தலா ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் இடத்திலேயே கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும். இதில் உள்ள விண்ணப்ப எண் மூலமாகத்தான் பின்னர் மறுகூட்டல் முடிவுகளை அறிந்துகொள்ள முடியும்.

சிறப்பு துணை பொதுத் தேர்வு

பொதுத்தேர்வில் வெற்றிவாய்ப்பை இழந்தவர்கள்தேர்வுக்கு விண்ணப்பித்து கலந்துகொள்ளாதவர்களுக்கு ஜூன் 28-ம் தேதி சிறப்பு துணை பொதுத் தேர்வு நடத்தப்படும். இதற்கு விண்ணப்பிப்பது குறித்து தனியாக அறிவிப்பு வெளியிடப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.