...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
'நீட்' போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வுகள் காரணமாகவும், அவற்றுக்கான
முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாலும், பிளஸ் 2 தேர்வு, 'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கான மவுசு, குறைந்து வருகிறது. இன்ஜி., கல்லுாரிகளிலும், ஏராளமான இடங்கள் இருப்பதால், 'கட் ஆப்' மதிப்பெண்கள் அவசியமற்றதாக மாறி வருகின்றன.
தமிழகத்தில், மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில், மாணவர்களை சேர்க்க, 1984ல், நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வு, அண்ணா பல்கலை மற்றும் மருத்துவ பல்கலையால் நடத்தப்பட்டது. ஆனால், இந்த தேர்வில், கிராமப்புற மாணவர்களால், பெரிதாக ஜொலிக்க முடியவில்லை. அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பாலும், உயர் நீதிமன்ற உத்தரவாலும், நுழைவு தேர்வு முறை, 2006ல், ரத்து செய்யப்பட்டது.
நாளுக்கு நாள்
இதையடுத்து, ஒற்றை சாளர கவுன்சிலிங் வழியாக, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த கவுன்சிலிங் முறைக்கு, பிளஸ் 2
தேர்வில், முக்கிய பாடங்களில், மாணவர்கள் பெறும்மதிப்பெண்களை கணக்கிட்டு, 'கட் ஆப்' மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, கட் ஆப் மதிப் பெண்ணை கணக்கிட்டு, இடங்கள் ஒதுக்கப் படுகின்றன.
இந்நிலையில், மீண்டும் நுழைவு தேர்வு வந்துள்ள தால், கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசும், நாளுக்கு நாள் குறைந்தவண்ணம் உள்ளது. மருத்துவ படிப்புக்கான, நீட் தேர்வு அமலுக்கு வந்துள்ளது. நீட் தேர்வை எழுத, பிளஸ் 2 தேர்ச்சி யுடன், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியலில், பொதுப் பிரிவினர், 50 சதவீதமும், பொதுப்பிரிவு மாற்றுத் திறனாளிகள், 45 சதவீதம், மற்ற இனத்தவர், 40 சதவீதமும் மதிப்பெண் பெற வேண்டும்.
'ரேங்க்' பட்டியல் தயாரிப்பில், பிளஸ் 2 தேர்வின், கட் ஆப் எவ்வளவு என்ற கேள்விக்கே இடமில்லை. நீட் நுழைவு தேர்வு மதிப்பெண் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது. இதனால், மருத்துவத்தில், கட் ஆப் தேவை இல்லாமல் போய் விட்டது. அதேநேரம், 'பாரா மெடிக்கல்' என்ற மருத்துவ சார் படிப்புகளுக்கு, கட் ஆப் பார்க்கப்படுகிறது.
இன்ஜினியரிங்
இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க் கையை பொறுத்தவரை,மாணவர்களின் எண்ணிக் கையை விட, இரண்டு மடங்கு அதிகமாக, இடங்கள் உள்ளன. தற்போது, இன்ஜினியரிங் படிப்பிற்கு தகுதியான, கணித பாடப் பிரிவில், நான்கு லட்சம் பேர் படித்து, பிளஸ் 2 தேர்ச்சி பெறுகின்றனர். இவர்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள், கலை, அறிவியல் கல்லுாரிகளுக்கும், மற்ற
படிப்புகளுக்கும்செல்கின்றனர். 1.50 லட்சம் மாணவர்கள், இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு படிப்பு களில், தனியார் கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில் சேருவர்.
மீதமுள்ள, 1.50 லட்சம் பேர் மட்டுமே, இன்ஜி., கவுன்சிலிங்குக்கு வருகின்றனர். அவர்களுக்கும், தேவையை விட பல மடங்கு அதிகமாக இடங்கள் உள்ளதால், கட் ஆப் இருந்தால் தான், இன்ஜினியரிங் இடம் கிடைக்கும் என்ற, தேவை இல்லாமல் போய்விட்டது.
மொத்தம் உள்ள, 550 கல்லுாரிகளில், முன்ன ணியில் உள்ள, 50 கல்லுாரிகளுக்கு மட்டுமே, கட் ஆப் மதிப்பெண் அதிகமாக தேவைப்படு கிறது. சிலர், கட் ஆப் அதிகம் பெற்றிருந் தாலும், தங்கள் சொந்த மாவட்டம் மற்றும் தங்களுக்கு பிடித்த கல்லுாரியை, ஏற்கனவே முடிவு செய்து, அதில் சேர்ந்து விடுகின்றனர். எனவே, கட் ஆப் மதிப்பெண்ணுக்கான மவுசு குறைந்த வண்ணம் உள்ளது.
Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=2024411