Wud love to sponsor travel expenses for atleast 2 underprevilleged students or Govt school students appearing for #NEET this year. Inbox me the details like hall ticket, place where ur exam hall assigned will book the tickets for u.
...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பலருக்கு வெளிமாநிலத்தில் தேர்வு நடைபெறுகிறது. நீட் தேர்வு நடைபெற இன்னும் 2 நாள்களே உள்ள நிலையில், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ-மாணவிகளுக்குக் கேரளாவின் எர்ணாகுளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதியிலும் பல்வேறு மாணவ மாணவிகளுக்கு ராஜஸ்தானிலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.
1. வெளி மாநிலங்களில் தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்குத் தேவையான பண உதவி செய்ய, பலர் நண்பர்களுடன் சேர்ந்து உதவி செய்ய முன்வந்துள்ளனர். உதவி செய்வோர் மற்றும் தேவைப்படுவோர் news@vikatan.com என்ற இ-மெயில் ஐடிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
2. விஜய் சோலைசாமி
புனேயில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வரும் இவர், தமிழகத்தைச் சேர்ந்தவர், NEET தேர்வு எழுதும் 20 தமிழக மாணவர்களுக்கு, சென்னையில் உள்ள நண்பர்களின் உதவியுடன், கேரளாவுக்கும் ராஜஸ்தானுக்கும் தேர்வு எழுதச் செல்ல, விமான பயணச்சீட்டு அல்லது ரயில் பயணச்சீட்டு வாங்குவதற்கு நிதி உதவி செய்ய முன்வந்துள்ளார். NEET தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மாணவர்களின் ஹால் டிக்கெட்டை புகைப்படமெடுத்து வாட்ஸ்அப் மூலமாகவோ மெயில் மூலமாகவோ அனுப்பி, இவரைத் தொடர்புகொள்ளலாம்.
தொடர்பு எண்
விஜய் சோலைசாமி : +91 8220092777
Email :viji_@yahoo.com
3. ராஜஸ்தான் தமிழ்ச் சங்கம்
ராஜஸ்தான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் தமிழக மாணவ மாணவிகள் அங்கு சென்றதும் அவர்களுக்குத் தேவையான வாகன உதவி, தங்குவதற்கான வசதி, உணவு, தேர்வு நடைபெறும் இடத்தை அடைவதற்கான உதவி அனைத்தையும் செய்ய முன்வந்துள்ளனர். ராஜஸ்தான் செல்லும் மாணவ/மாணவிகள் கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்குத் தொடர்புகொண்டு உதவியைப் பெறலாம்.
திரு. முருகானந்தம் (9790783187)
திருமதி. சௌந்தரவல்லி (8696922117)
திரு.பாரதி (7357023549)
தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், ஏழை மாணவர்கள் தேர்வு எழுத செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் தவிப்பைக் கருத்தில் கொண்டு சமூக வலைதளங்களில் பல்வேறு தன்னார்வ தொண்டர்கள் உதவி செய்வதாக அறிவித்துள்ளனர். இதற்காக, ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்ட இளைஞர்கள் முடிவு செய்துள்ளனர். அதன்படி, சென்னையில், தாம்பரத்தைச் சேர்ந்த தன்னார்வ தொண்டர் பிரபு காந்தி உதவி புரிய முன்வந்துள்ளார். இவரின் போன் எண்- 9751172164
4. புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரும் நீட் தேர்வு எழுத செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருப்பதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இவரை 9788994099, 8248199895, 7598249353 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவர்களைப் போன்று மற்ற ஊர்களைச் சேர்ந்த நண்பர்களும் ஃபேஸ்புக் வழியாக நிதி திரட்டி நீட் தேர்வு எழுத செல்லும் மாணவ மாணவிகளுக்கு உதவி புரியுங்கள் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ராமகிருஷ்ணாவிடம் பேசியபோது, ''ஏராளமானோருக்கு எர்ணாகுளத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பேருந்தில் டிக்கெட் எடுத்து அனுப்பி வைப்பது சாத்தியமில்லாத விஷயமாகத் தோன்றுகிறது. எனவே டெம்போ டிராவலர் வேனில் எர்ணாகுளத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். நம் மாணவ -மாணவிகள் பாதுகாப்பாகச் சென்று வருவார்கள் '' என்றார்.
தாம்பரத்தைச் சேர்ந்த பிரபு காந்தி, ''மாணவர்கள் தங்களுடன் ஆதார் கார்டு மற்றும் ஹால் டிக்கெட் மறக்காமல் எடுத்து வரவும். ராஜஸ்தானில் எங்களால் தங்குவதற்கு பாதுகாப்பான இட வசதி செய்து தர முடியும்'' என்று தெரிவித்துள்ளார், தமிழகத்தைச் சேர்ந்த பல ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாணவ- மாணவிகளுக்கு உதவி செய்ய முன் வந்துள்ளனர்.
நடிகர் பிரசன்னா, தனது டிவிட்டர் பக்கத்தில், “நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு என்னால் உதவ முடியும். உதவி வேண்டுவோர் உங்களின் ஹால் டிக்கெட் போன்ற விவரங்கள் மற்றும் உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தின் விவரங்களை எனக்கு அனுப்பவும். நான் உங்களின் பயண டிக்கெட்டை பதிவு செய்கிறேன்.” எனப் பதிவிட்டுள்ளார்.
டி.டிவி தினகரன்
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு மையம் ஒதுக்கபட்டுள்ள தமிழக மாணவர்களுக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக தங்கும் வசதியும், தேர்வு மையத்துக்கு வழிகாட்டவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிமுன் அன்சாரி
நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களுக்குச் செல்ல பொருளாதார ரீதியாகச் சிரமப்படும் நாகை தொகுதிக்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் உடனடியாக என்னை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்குத் தேவைப்படும் பொருளாதார உதவிகள், நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் என நாகை தொகுதி எம்எல்ஏ தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.
தொடர்புக்கு : 9940738572, 9092020923, 04365 _247788.