...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 17/04/2018 17:30:53

 Latest News

பெங்களூர் வாழ் மேலப்பாளையம் மக்களின் புதிய கட்டிட பணிக்கு MPMPROF சார்பில் நிதி உதவி

| Starts On  2018-04-17 Ends On  2018-04-17 | Author | Email

பெங்களூர் வாழ் மேலப்பாளையம் மக்களின் புதிய கட்டிட பணிக்கு MPMPROF சார்பில் நிதி உதவி 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,

சகோதர சகோதரிகளே., 

 பெங்களூரைச் சார்ந்த நமதூர் ஜமாத்தார்கள் மஸ்ஜிதே ஹாமீம் நிர்வாகக் கமிட்டியின் சார்பில் குழந்தைகள் / பெண்களுக்கான மதரஸா.,பெண்கள் தொழுகைக்கான இடம் மற்றும் இன்டர்வியூ / வேலைதேடி செல்லும் நமதூர் சகோதரர்கள் தங்கி கொள்வதற்கான இடம் ஆகியவற்றிக்காக சுமார் 2700 சதுரஅடியில் இடம் வாங்கப்பட்டு இதற்கான கட்டிட பணிகள் நடைபெற்று வருகின்றது.

நமது அமைப்பின் சார்பில் பெங்களூர் வாழ் மேலப்பாளையம் மக்களின் இந்த புதிய கட்டிட பணிக்கு 55,000/- ரூபாய் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டது. இன்டர்வியூ மற்றும் வேலை தேடிச் செல்லும் நமது மாணவர்களுக்கு தங்குவதற்கான இடத்தையும் அமைப்பதாக உறுதி அளித்துள்ளார்கள். இன்ஷா அல்லாஹ் அவர்களின் பணி சிறக்கவும் துஆ செய்வோம். உதவி புரிந்த நமது அமைப்பின் உறுப்பினர்களுக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவானாக !

- மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு (MPMPROF)