...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 30/03/2018 17:12:02

 Latest News

'அம்மா கல்வியகம்' சார்பில் இலவச NEET & JEE கையேடு வெளியீடு

| Starts On  2018-03-30 Ends On  2018-03-30 | Author | Email

'அம்மா கல்வியகம்' சார்பில், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை, மாணவர்கள் எளிதாக எதிர்கொள்வதற்காக, 'Ready Reckoner' என்ற பெயரில், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இக்கையேடு கடந்த வாரம் வெளியிடப்பட்டது.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில், 'அம்மா கல்வியகம்' துவக்கப்பட்டது. இது, இலவச கல்வி இணையதளம். இதில், ஐ.ஐ.டி., - ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு, கட்டணம் செலுத்தி, பயிற்சி பெற முடியாத மாணவர்களுக்காக, இலவசமாக, தலைசிறந்த ஆசிரியர்கள் பாடம் நடத்தும், 1,500 வீடியோக்கள் வெளியிடப்பட்டன.தற்போது புதிதாக, மாணவர்கள், அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்வதற்காக, இலவச கையேடு தயார் செய்துள்ளது. 

புதிதாக வெளியிடப்பட்ட இந்த கையேடு 230 பக்கங்கள் உடையது. இந்த கையேட்டை, அம்மா கல்வியகத்தின் www.ammakalviyagam.in என்ற இணையதளத்திலிருந்து, இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்,'' என்றார்.


Click here to register and download the book as PDF http://www.ammakalviyagam.in/