...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 30/03/2018 07:45:52

 Latest News

மாணவர்கள் மேலப்பாளையம் கன்னிமார் குளத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்

| Starts On  2018-03-30 Ends On  2018-03-30 | Author | Email

மேலப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மேலப்பாளையத்தின் வாழ்வதாராமாக உள்ள கன்னிமார் குளத்தை தூர் வார வேண்டும் என நமதூர் மேலப்பாளையம் மக்களின் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.


அதன் விளைவாக கடந்த ஒரு வார காலமாக அண்ணா பல்கலை கழகத்தின் டீன் அவர்கள் தலைமையில் NSS மாணவர்களை கொண்டும் ஊர் மக்கள் இணைந்து கன்னிமார் குளத்தை சுத்தபடுத்தி தூர்வாரும் பணி நடைபெற்றது. இதில் பல்கலை கழகத்தை சேர்ந்த சுரேந்தர் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தினார். பசுமை மேலப்பாளையம் & தவ்ஹீது ஜமாஅத் அமைப்புகளும் பணிகளில் பங்கு பெற்றனர். 


பணிகளின் போது மாவட்ட ஆட்சியாளர் சந்தீப் நந்தூரி அவர்கள் வருகை தந்து ஊக்க படுத்தும் விதமாக பரிசுகளை வழங்கினார், மற்றும் தேவையான உதவிகளை அனைத்தும் செய்வதாக கூறி உள்ளார். பசுமை மேலப்பாளையம் குழுவை சேர்ந்த பஷீர் மற்றும் செய்யது முகம்மது புகாரி அவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.


அல்ஹம்துலில்லாஹ்.