...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 17/03/2018 10:44:15

 Latest News

Aptitude & Communication - மாணவர்களுக்கான தொடர் கலந்துரையாடல் வகுப்புகள்

| Starts On  2018-03-17 Ends On  2018-03-17 | Author | Email

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

கல்லூரியில் பயிலும் நமதூர் மாணவர்களுக்கு குறிப்பாக 3ஆம் ஆண்டு மற்றும் இறுதியாண்டு பயிலும் மாணவர்களை இன்டர்வியூ மற்றும் வேலைவாய்ப்புக்கு தயார்படுத்துவது சம்பந்தமாக MPMPROF சார்பில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியை தொடர்ந்து மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்ஷா அல்லாஹ் நடைபெற உள்ளது. 

பெரும்பாலான வேலைவாய்ப்பு முகாம் மற்றும் வளாகத் தேர்வுகளில் (Campus Interviews) மாணவர்கள் சிரமமாக எதிர்கொள்வது Aptitude Test & Basic English Communication. இதனை கருத்தில் கொண்டு Aptitude - பயிற்சி வகுப்புகள் வெள்ளிக்கிழமையும் & Communication சம்பந்தமான பயிற்சி வகுப்புகள் சனிக்கிழமையும் வாரம்தோரும் (MEEF நூலகத்தில் வைத்து இரவு 8.15pm - 9.30pm) நடைபெற உள்ளது. 

நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் இறுதியாண்டு பயிலும் நமதூரில் வெறும் 10-15 பேர் மட்டும் கலந்து கொள்வது கவலைக்குரியது. தற்போதைய வேலைவாய்ப்பு சூழலை கருத்தில் கொண்டு மாணவர்களிடம் எடுத்து சொல்லி இந்த வகுப்புகளில் கலந்து பயன்பெறச் செய்யுமாறு வேண்டுகின்றோம்.




- MPMPROF Job Desk 

(மேலப்பாளையம் முன்னேற்றக் கூட்டமைப்பு)

தொடர்புக்கு : 98942 27163, ‭97901 11850‬, ‭95854 65676