...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 13/03/2018 18:14:25

 Latest News

10 ரூபாய் கட்டணத்தில்'மனிதம்' மருத்துவமனை

| Starts On  2018-03-13 Ends On  2018-03-13 | Author | Email

நமது மேலப்பாளையத்தில் 10 ரூபாய் கட்டணத்தில் இயங்கும் 'மனிதம்' மருத்துவமனை மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. ஏழைகளுக்காக மனிதம் அறக்கட்டளை சார்பில்  மருத்துவமனை கடந்த ஜனவரி மாதம் துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 

அங்கு சர்க்கரை நோய், இருதயநோய், குழந்தைகள் மருத்துவம், மகளிர் மருத்துவம் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன. காலை 9:00 - மாலை 5:00 மணி வரை மருத்துவ ஆலோசனை கட்டணமாக புறநோயாளிகளிடம் 10 ரூபாய்மட்டுமே பெறப்படுகிறது. தினமும் மாலை 5:00 - இரவு 10:00 மணி வரை சிறப்பு மருத்துவர்கள் வருகை தருகின்றனர். 
அப்போது கட்டணமாக 50 ரூபாய் பெறப்படுகிறது. அங்குள்ள மருந்தகத்தில் மருந்துகள் மிக குறைந்த விலையில் விற்கப்படுகின்றன. ரத்த சோதனை, சர்க்கரை நோய் சோதனை போன்ற லேப் கட்டணங்களும் 10 ரூபாய் முதல் மிக குறைந்த கட்டணமே வசூலிக்கப்படுகிறது. டாக்டர்களுக்கான சம்பளத்தை அறக்கட்டளையே வழங்கிவிடுவதால், கட்டண குறைவான மருத்துவத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பகலில் நான்கு டாக்டர்களும், மாலை பிரிவில் மூன்று டாக்டர்களும் பணிபுரிகின்றனர்.