...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan
+2 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வருங்காலத்தில் எளிதில் அரசு ஊழியராக (IAS,Group 1 ,group 2) வேண்டும் எனில் என்ன படிக்கலாம் என்பதற்கான பதிவு :
1) அரசு வேலையில் இணைய வேண்டும் என்று நினைத்தால் Arts and science பிரிவில் Bsc maths or Bsc physics or Bsc chemistry தேர்வு செய்து படித்து விட்டு பிறகு Tnpsc தேர்வுகளுக்கு படித்து அரசு பணியில் இணையலாம்.
2)மேலும் Group 2 பதவிக்கு எளிதாக செல்ல வேண்டும் என்று நினைத்தால் BA Tamil அல்லது BA english படிக்கலாம்..Group 2 தேர்வில் 200 கேள்வியில் 100 கேள்விகள் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்திட்டத்தில் கேட்கப்படும்.. மேலும் தமிழ் வழிக்கல்விக்கு 20 % இடஒதுக்கீடு உண்டு.
3)Engineering துறையில் அரசு வேலையில் இணைய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் Civil or EEE தேர்வு செய்யலாம்..இந்த துறையில் மட்டுமே அதிகமான அரசு வேலை வாய்ப்பு உண்டு.
4) Bsc Nursing படிப்புக்கு அரசு வேலையும் ,உள் நாட்டிலும், வெளி நாட்டிலும் அதிகப்படியான வேலை வாய்ப்புகள் உள்ளது...ஆகவே நம் சகோதர்கள் இதை தேர்வு செய்து படிக்கலாம்.
5) + 2 பிறகு Diploma படிப்பில் சேர்க்காமல் முடிந்த வரை Engineering படிக்க வையுங்கள்..Diplomo மட்டும் வைத்து கொண்டு எந்த விதமான Degree தேர்வுகள் எழுத முடியாது...ஒரு வேளை குடும்ப சூழ்நிலை காரணமாக Diplomo படிக்க வேண்டும் என்று நினைத்தால் தமிழகத்தில் மட்டும் 40 க்கும் அதிகமான அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன...அங்கே கல்வி கட்டணம் வருடத்திற்கு ரூ 2000 மட்டூமே..முஸ்லிம்களுக்கான இடங்கள் நிரப்பபடாமல் உள்ளது.
(இது சகோதரர் யூனுஸ் அவர்களின் முகநூல் பதிவு)
By M.Mohamed Younus, BE, M.Tech(IIT),
Gazetted Assistant Professor, Government Engineering college.