...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 21/04/2018 20:29:22

 Latest Articles

கண்ணுக்கு தெரியாத நம் சமுதாய விஞ்ஞானிகள்

| Category | Source Not Available | Author Naseerudeen VAB | Email deen.naseer@gmail.com


உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன்- 58:11 )


கி.பி 14 நூற்றாண்டு வரை அறிவாளிகளையும் விஞ்ஞானிகளையும் வாரி உலகத்திற்கு தந்த இஸ்லாமிய சமூகம் இப்போது உலக அளவில் அறிவியல் துறையில் பின் தங்கிய நிலையில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அதே நேரம் அறிவியலில் நம் சமுதாயத்தினரின் பங்கு இல்லாமல் எப்போதும் இருந்ததில்லை. இறைவன் நாடினால் மீண்டும் நம் சமுதாயம் பெருவாரியாக சாதிக்கும் காலம் விரைவில் வரும்.


தமிழகத்தில், சமீப கால அறிவியலில் & கண்டுபிடிப்புகளில் தடம் படித்த நம் சமுதாய சாதனையாளர்களை  அறிமுகப்படுத்தி வைக்கவும், அவர்களின் மூலம் நம் இளைய சமுதாயத்தை அறிவியலை நோக்கி நகர செய்யவும் இந்த கட்டுரை.


பின்வரும் சாதனையாளர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் & ஆராய்ச்சிகள் எத்தனை விஞ்ஞானிகளை ஆச்சர்யத்தோடு திரும்பிப் பார்க்க வைத்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ?! வாருங்கள் படிப்போம்.


இளம் சாட்டிலைட் விஞ்ஞானி சாரூக் ரிஃபாத்உலகின் மிகச்சிறிய செயற்கைக்கோளை தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் ஒருவர் வடிவமைத்தார். அவர் தான் பள்ளபட்டியை சேர்ந்த சாரூக் ரிஃபாத். இவர் வடிவமைத்த செயற்கைக்கோளின் எடை வெறும் 64 கிராம் மட்டுமே. அந்த செயற்கைகோள் 2017-ஜூன் 22ம் நாள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. கலாம் சாட் என பெயரிடப்பட்ட இந்த கையடக்க சாட்டிலைட் திட்டமிட்டபடி நான்கு மணி நேரம் விண்ணில் இருந்தது, அதன் பின் கடலில் விழுந்தது. இந்த வெற்றியின் மூலம் விவசாயம், வானிலை குறித்த ஆய்வுக்கான சாட்டிலைட்களை குறைந்த செலவில் உருவாக்க முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் மேலும், தற்போது கையடக்க சாட்டிலைட்டை விண்ணில் நிரந்தரமாக நிலை நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார் ஷாரூக்.


இந்தியாவின் இளம் விஞ்ஞானி என்ற பட்டம் வெற்ற இவர் 2017-ம் ஆண்டு பிளஸ் டூ தேர்வை முடித்து தற்போது B.Sc இயற்பியல் படித்து வருகிறார். இம்மாணவனின் அறிவியல் திறன் குறித்து அமெரிக்காவின் நாசா விண்வெளி மைய ஆராய்ச்சியாளர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார்கள்.


Read more: https://timesofindia.indiatimes.com/india/nasa-launches-worlds-lightest-satellite-designed-by-18-year-old-tn-student/articleshow/59278857.cmsபடிக்காத ஏழை விஞ்ஞானி அப்துல் ரசாக்தண்ணீரிலிருந்து எண்ணெயைப் பிரித்தெடுக்கும் கருவியைக் கண்டுபிடித்த மதுரை விஞ்ஞானி அப்துல் ரசாக், அதனை விஞ்ஞானிகள் முன்பு செய்து காட்ட தில்லியிலிருந்து அழைப்பு வந்தும் பண வசதி காரணமாக செல்ல முடியாமல் தவிக்கும் வறுமைக்கு சொந்தக்காரர்.


7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அப்துர் ரசாக் ஒரு எலெக்ட்ரிசியன். இதுவரை 45 பொருட்களைக் கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளார். 2006-ல் தனது மனைவியின் உடல்நிலையைக் கருத்திற் கொண்டு உருவாக்கிய ரைஸ் குக்கர்தான் (Multi purpose cooking vessel which can cook 'sambhar' and rice simultaneously and drains the excess starch water from rice) இவரது முதல் படைப்பு, இந்த கண்டுபிடிப்பிற்காக, 2010-ல் குடியரசு தலைவரிடம் இருந்து தேசிய விருதும் வாங்கியுள்ளார். கடலில் கொட்டும் எண்ணெயை 90% வெற்றிகரமாக பிரித்தெடுக்கும் இயந்திரத்தை அண்மையில் உருவாக்கியுள்ளதுதான் அவரின் கண்டுபிடிப்பிலெல்லாம் மிக மையமானது. தன் கண்டுபிடிப்புகளை சாதனைகளாக்க போதிய பொருளாதார வசதி இல்லாத ஒரு ஏழை விஞ்ஞானி.


Read more: https://adiraipirai.in/archives/685


3. குமரி இளம்விஞ்ஞானி மாஷா நசீம்கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பார்வதிபுரத்தை சேர்ந்தவர் மாஷா நசீம்(24). இவர் இதுவரை 14 புதிய அறிவியல் கண்டு பிடிப்புகளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.


நெருப்பு இல்லாமல் மின்சாதனம் மூலம் அரக்கை பயன்படுத்தி சீல் வைக்கும் கருவி இவரது கண்டுபிடிப்புகளில் ஒன்று. கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் குமரி மாவட்டத்தில் வாக்குச் சாவடி மையங்களில் இம்முறை அமல்படுத்தப்பட்டது. ஜனாதிபதி விருது, இரண்டு சர்வதேச விருது மற்றும் ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ள இவர் இளைய தலைமுறையை அறிவியலில் ஊக்குவிக்கும் பல முயற்சிகளிலும் பணியாற்றி வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற தேசிய இளைஞர் விழாவில் இவருக்கு தேசிய இளைஞர் விருது வழங்கியது.


Read more: http://tamil.thehindu.com/tamilnadu/article21910873.ece


மேலே பார்த்தவர்கள் பல்கலைக்கழகம் செல்லாத சாதனையாளர்கள். தமிழக பல்கலைக்கழகங்களில் அறிவியல் ஆராய்ச்சி துறையில் நம் இஸ்லாமிய சமுதாயத்தின் சில பங்களிப்பை கீழே தொடர்ந்து படியுங்கள்.


வேளாண்மை, மருத்துவம் & நுண் உயிரியல் ஆராய்ச்சிகள்1)மண்புழு என்ற அற்பஉயிரியை அற்புத உயிரியாக்கி இயற்கை உரம் உருவாக்கி சாதித்த டாக்டர்.சுல்தான் அஹமது இஸ்மாயில் (சென்னை புதுக்கல்லூரி)


Profile:  http://www.erfindia.org/sultanahmedismail.asp


2)பாசுமதி அரிசி மூலம் இந்தியாவின் அன்னிய செலவானியை உயர்த்திய அரிசி விஞ்ஞானி பத்மஸ்ரீ சித்தீக் (இளையான்குடி)


Profile: http://www.abfindia.org/PeopleECMSiddiq.aspx


3)புற்றுநோய் ஆராய்ச்சியில் பல திருப்புமுனைகளை கண்டுபிடித்த அக்பர்ஷா (பாரதிதாசன் பல்கலைக்கழகம்-திருச்சி)

Profile: http://indianmuslimlegends.blogspot.com.au/2013/06/427-prof-ma-akbarsha.html

4)நுண்ணுயிரி ஆராய்சியில் புதுமைபடைத்த டாக்டர்.தாஜூதீன (பாரதிதாசன் பல்கலைக்கழகம்,-திருச்சி)

Profile: http://thajuddin.com/

தொடரும் பட்டியல், இன்னும் சுருக்கமாக ,

5)ஆழ்கடல் மீன்களில் அற்புதங்களை அள்ளித்தரும் அஜ்மல்கான்(அண்ணாமலை பல்கலைக்கழகம்).

6)சதுப்பு நில ஆராய்சியில் ஆச்சரியங்கள் படைத்த அப்துல் ரகுமான் (பூண்டி புஸ்பம் கல்லூரி தஞ்சாவூர்).

7)பாக்டீரியாக்களில் மரபணுமாற்றத்தை கண்டறிந்த முனைவர் ஹூசைன் (மதுரை காமராஜர் பல்கலைகழகம்).

8)மாசுக்கட்டுப்பாட்டு ஆராய்சியில் புதுமை செய்த அப்பாஸி (பாண்டிச்சேரி பல்கலைகழகம்).

9)மீன் இன ஆராய்சியில் புது வகை மருத்துவங்கள் கண்டறிந்த முகமது அனீபா (புனித சேவியர்கல்லூரி – பாளையங்கோட்டை).

source: https://adiraipirai.in/archives/38386

இது மட்டுமா ?!

அறிவியல் துறையில் சமீபமாக பத்ம ஸ்ரீ விருது வாங்கிய சாதனையாளர்கள் Prof. Hakim Syed Khaleefathullah (Padma Shri 2014), Prof.(Dr) M. Ahmed Ali (Padma Shri 2011) மற்றும்  Shri Mecca Rafeeque Ahmed (Padma Shri 2011) என இந்த சாதனையாளர்களின் பட்டியல் நீண்டு கொண்டே தான் செல்கிறது.


உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும்,கல்வி ஞானம் கொடுக்கப்பட்வர்களுக்கும், அல்லாஹ் பதவிகளை உயர்த்துகிறான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கிறான். (அல் குர்ஆன்- 58:11 )


Note: கட்டுரையின் தகவல்கள் பல்வேறு இணையதளங்களில் இருந்து பெறப்பட்டது & சரிபார்க்கப்பட்டது.