...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

  Posted | 28/01/2018 18:05:50

 Latest Articles

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்

| Category | Source https://www.cmchistn.com | Author Mohamed Ismail Ali | Email mpmismail@gmail.com

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்

ஏழைகளுக்கு நவீன மருத்துவ வசதிகள், அனைவருக்கும் சுகாதார வசதி வழங்குவதற்காக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து அட்டை வாங்கிய ஒவ்வொரு குடும்பமும் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ.4 லட்சம் வரை காப்பீடு பெறலாம். ஒரு சில குறிப்பிட்ட உயர் சிகிச்சைகளுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரையிலும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது



தகுதி

  • குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.72,000-ற்கு குறைவாக.

  • குடும்ப அட்டையில் இடம் பெற்றிருக்கும் நபரின் மனைவி/கணவர், குழந்தைகள் & சார்ந்த பெற்றோர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவர்.


விண்ணப்பிக்க

கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீட்டு அடையாள அட்டை வழங்கும் மையத்தில் சமர்ப்பித்து காப்பீட்டிற்கான அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம். காப்பீட்டு அடையாள அட்டை 4 ஆண்டுகளுக்குப் பயன்படுத்தலாம். இதில் குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும்.


காப்பீட்டிற்கு கீழ் உள்ள சிகிச்சைகள்

  • 1027 சிகிச்சை முறைகள் & 154 தொடர் சிகிச்சை முறைகள்

  • 38 பரிசோதனைகள் (உதாரணமாக ECHO, MRI, CT SCAN)

  • இருதய மாற்று அறுவை சிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை முதலிய 8 உயர் சிகிச்சை முறைகள்


பயன்கள்

  • சிகிச்சைகள்: காப்பீட்டு அட்டையின் உதவி கொண்டு திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் (அரசு & தனியார்) குறிப்பிட்ட நோய்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. திட்டத்திற்கான அரசு இணையதள இணைப்பு G-ல் குறிப்பிட்டுள்ள 158 சிகிச்சைகள் அரசு மருத்துவ மனைகளில் மட்டுமே வழங்கப்படும்.

  • பரிசோதனைகள்: இணையதளத்தில் 420 மையங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அங்கீரகரிக்கப்பட்ட மருத்துவரின் பரிந்துரை பெற்று வருபவர்கள் இங்கு பயன் பெறலாம்.

  • மிக அவசர சிகிச்சைகளுக்கு முதலில் சிகிச்சை பெற்று பின்பு 24 மணி நேரத்திற்குள் காப்பீட்டு அட்டை மூலம் பயன்பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.


திட்டம் பற்றி அறிந்து கொள்ளவும், சிகிச்சை பெற வழி காட்டு உதவிகள் பெறவும் 24 மணி நேர கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 3993


சிகிச்சை & மருத்துவமனை பட்டியல் பார்க்க: https://www.cmchistn.com

தகவல் தொகுப்பு: V.A.B.Naseerudeen