...Indeed, Allah will not change the condition of a people until they change what is in themselves... Surah Ar-Rad 13:11 The Holy Quraan

Melapalayam Progressive Forum

மேலப்பாளையம் திருநெல்வேலி அருகில் உள்ள நகரமாகும் தற்போதைய பெயா் இந்நகாின் அமைவிடத்தைக் கொண்டு அறியப்படுகிறது (இந்நகா் பாளையங்கோட்டைக்கு மேற்கில் அமைந்துள்ளதால் மேற்கு பாளையம் என்பது மருவி மேலப்பாளையம் என்றானது). திருநெல்வேலி மாநகராட்சி பகுதியாக விளங்கும் இவ்வூாில் முஸ்லிம்கள் 80 சதவீதமும் ஹிந்துக்களும் கிறிஸ்தவா்களுமாக 20 சதவீதம் உள்ளனா்.

தமிழகத்தின் ஒரே ஜீவ நதியான தாமிரபரணி நதிக்கரையின் கிழக்கில் அமைந்துள்ளதாலும் ஊரைச்சுற்றி பாளையங்கால்வாய் செல்வதாலும் பசுமையான வயல்வெளிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. திருநெல்வேலியின் இரட்டை நகரங்களான திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக உள்ளன. மேலப்பாளையத்திலிருந்து மேற்கூறிய இரண்டு நகரங்களுக்கிடையேயான துாரம் சுமாா் 4 கிமீ ஆகும்.

பாளையங்கோட்டையில் உள்ள, மாவட்ட மைய நூலகத்தில் உள்ள பல்வேறு நூல்களில், மேலப்பாளையத்தின் பெயர் "மங்கை மா நகர்" என்றும், "திருமங்கை நகர்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக்காலத்து நாட்டுப்புறப் பாட்டுகளில் "மங்கா நல்லூர் மாமக்கள்"என்றும் மேலப்பாளையதைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நகரின் வரலாறு வாஸ்கோடகாமாவின் வருகைக்கு முந்தையது மேலும் இந்தியாவில் இஸ்லாமிய வளர்ச்சியுடன் தொடர்புடையது.

இசுலாமிய மார்க்கமானது இந்தியாவில் இரண்டு வழிகளில் அறிமுகமானது. 1.அரசியல் 2. வியாபாரம். வட இந்தியாவில் அரசியல் மூலமாகவும் தெற்கே வியாபார ரீதியாகவும் பரவியது. ஆனால் தென்னிந்தியாவில் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் அவர்களின் காலத்திலேயே வேரூன்றியது. சேர நாட்டை ஆண்ட சேரமான் பெருமான் நபி அவர்களை சந்தித்து இசுலாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முதல் இந்தியராவார். மேலும் தமது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் ஓர் இறையில்லத்தை கட்டவும் உத்தரவிட்டார். கேரளாவின் கொடுங்கல்லூரில் இன்றளவும் 1000 வருடங்களை கடந்த இந்தியாவின் முதல் ஜும்ஆ பள்ளியாக உள்ளது. நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம் ஹஜ்ஜத்துல் விதா பேருரையின் காரணமாக ஸஹாபா பெருமக்கள் உலகின் பல பகுதிகளுக்கு இஸ்லாத்தை எடுத்து சென்றார்கள். சில ஸஹாபா பெருமக்கள் இவ்வாறு வந்தவா்கள் இந்தியாவிலேயே தங்கி இஸ்லாமிய பணியாற்றினா்.

ஹஜ்ஜாஜ் இப்ன் யூசுப் என்ற இஸ்லாமிய கவா்னாின் ஆட்சி காலத்தில் அரபு மக்கள் பல்வேறு நாடுகளுக்கும் புலம்பெயர்ந்தனர். அவ்வாறு புலம்பெயர்ந்த ஏழு குடும்பத்தை சேர்ந்த 50 நபர்கள், ஏற்கனவே அவர்களுக்கு தெரிந்த இந்தியாவின் கள்ளிக்கோட்டையை வந்தடைந்தனர். ஆனால் வந்தவர்கள் அங்கேயே தங்கியிராது தமிழகத்தை நோக்கி நகரத் தொடங்கினர். அவ்வாறு வந்தவர்கள் அன்றைய காலத்தில் மங்கை மாநகர் என அறியப்பட்ட மேலப்பாளையத்தை வந்தடைந்தனர். இப்போது பெரிய கொத்பா பள்ளிவாசல் அமைந்துள்ள வளமான இடத்தில் தமது இருப்பிடத்தை அமைத்து கொண்டு வாழத்தொடங்கினர். ஊரைச் சுற்றியுள்ள பிற மத மக்களே இவர்களுக்கு உதவிகள் செய்துள்ளனர். குறிப்பாக தொழில் உதவியாக நெசவு தொழிலையும் கற்றுக்கொடுத்துள்ளார்கள். இயல்பாகவே வியாபாரிகளான அவர்கள் இஸ்லாமிய முறைப்படி நேர்மையாக வியாபாரம் செய்ய அவர்களின் நல்லொழுக்கங்களால் கவரப்பட்ட மக்கள் இஸ்லாமை வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டனர்.

இவ்வாறு வந்த மக்கள் தமிழ் மொழியை கற்க அவர்களுக்கு தெரிந்த அரபி மொழியை பயன்படுத்தினர் குறிப்பாக தமிழை transliteration முறையில் அரபியில் எழுதி வந்துள்ளார்கள்.

1546 காலக் கட்டத்தில் நாகூரில் இருந்துவந்த இஸ்லாமிய மாமேதை நாகூர் ஷாகுல் ஹமீது பாதுஷா அவர்கள், இந்த இடத்தில் 40 நாட்கள் தங்கி இஸ்லாமியப் பிராச்சாரம் செய்தார்கள்.

"தாமிரபரணி நதிக்கரையில்,திருநெல்வேலி கலைக்டர் ஆபீசுக்கு அருகில் உள்ள பகுதியில், நாகூரில் இருந்து வந்த ,ஒரு இஸ்லாமிய செய்கு ஒருவர் மதப் பிரச்சாரம் செய்ததன் விளைவு, 1500 குடும்பங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்" இப்படி ஒரு குறிப்பு ஆர்னோல்ட் என்பவர் எழுதிய "SPREAD OF ISLAM (IN SOUTH INDIA), மற்றும் PREACHING OF ISLAM, என்கிற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் ஞாபகாா்த்தமாக மினாரா (மீரா பள்ளி) ஒன்றும் கட்டப்பட்டுள்ளது.

வாழ்க்கை முறை

ஒரே மாதிாியான மிக நீண்ட மற்றும் அகலமான தெருக்களில் பொது சுவர்கள் கொண்ட வீடுகள் மேலப்பாளையத்தின் தனி சிறப்பாகும். இதனால் முதன்முறையாக இவ்வூருக்கு வருபவர்கள் சிறிது குழப்பம் கொள்வது வாடிக்கையான ஒன்று. திருமணம், இறப்பு போன்ற தனி குடும்ப நிகழ்வுகளில் சுற்றத்தாரின் உதவிகள் அளவிட முடியாதவை.

மேலப்பாளையத்தின் எல்லைகளுக்கு உள்ளே திருமண உறவுகள் வைத்துக்கொள்வது மற்றொரு சிறப்பு தகுதியை இவ்வூருக்கு ஏற்படுத்துகிறது. அதாவது இங்குள்ள அனைவரும் ஏதாவது ஒரு வகையில் மற்ற குடும்பத்துடன் உறவு முறை கொண்டவராவார். திருமணத்திற்கு முன் மணமக்கள் இருவருமே ஜமாத் அல்லது பள்ளிவாசல்களில் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்க இந்த ஏற்பாடு உதவுகிறது.

மேலப்பாளையத்தின் திருமண விருந்துக்கள் பிற இடங்களில் சிறிது வேறுபடும், மணமகன் மணமகள் இருவீட்டாரும் தத்தமது சொந்தங்களுக்கு தனித்தனியே விருந்து ஏற்பாடு செய்வது, நெய் சோறு / தேங்காய் சோறுடன் கத்தாிக்காயானம் எனப்படும் தாளிச்சா வைக்கப்படுவது, சஹன்/கலம் என்று சொல்லப்படும் நால்வா் ஒரே நேரத்தில் அமா்ந்து சாப்பிடும் இஸ்லாமிய முறை போன்றவை அதில் குறிப்பிடத்தக்கவையாகும்.

கல்வியறிவு

சில சம்பவங்கள் முன்னிருந்தவைகளை முற்றிலும் மாற்றக்கூடியவை. வெள்ளந்தியான மக்களை அதிகம் கொண்ட கிராமம் என்ற நிலையில் இருந்து கல்வியில் எந்தவொரு பெரிய நகரத்திற்கும் சவால்விடும் அளவிற்கு இந்நகரின் வளர்ச்சி உள்ளது.

அரபு நாடுகளில் வேலைவாய்ப்பு பொருளாதார ரீதியாக முன்னேற்றத்தை ஏற்படுத்தியது என்றால் பாபர் மசூதி இடிப்பின் போது ஏற்பட்ட கலவரமும் அதையொட்டி நடத்தப்பட்ட தூப்பாக்கிசூடும் கல்வியியல் ரீதியாக பெரும் மாற்றத்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால் இம்மாற்றங்கள் எல்லாம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியாக நடந்தேறியுள்ளன. கல்வியின் முக்கியத்தை உணா்ந்து ஊாில் உள்ள தன்னாா்வலா்கள் மற்றும் மேலப்பாளையத்தைச் சோ்ந்த வெளிநாடு வாழ் இந்தியா்களின் கூட்டு முயற்சியில் சமூக நல சங்கங்கள் அமைப்புகள் தொடங்கப்பெற்றுள்ளன. இதன் பயனாக மேலப்பாளையத்தில் கல்வியறிவு பெற்றவா்களின் எண்ணிக்கை சுமாா் 62.3 சதவீதமாகும், இது நாட்டின் கல்வியறிவு பெற்றவா்களின் எண்ணிக்கையைவிட (59.5%)அதிகமாகும்.

2011-ம் கல்வி ஆண்டில் இவ்வூரைச் சோ்ந்த சதாம் உசேன் என்ற மாணவா் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தாா்.

நான்கு உயா்நிலை பள்ளிகளும் பெண்களுக்குக்கான அறிவியல் மற்றும் கலைக்கல்லூாி ஒன்றும் மேலப்பாளையத்தில் உள்ளது. அரசு பொறியியல் கல்லூாியும் மேலப்பாளையத்தின் எல்லையிலேயே அமைந்துள்ளது. ஆண்களுக்கான பாலிடெக்னிக் கல்லூாி தொடங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

மேலும் பலா் வெளிநாட்டு பல்கலைகழகங்கள் மற்றும் இந்தியாவின் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான IIT, IISc போன்றவற்றில் பட்டபடிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவா்களாக உள்ளனா்.

பள்ளிவாசல்கள்

பாரதி இந்நகரை கண்டிருந்தால் "எங்கெங்கு காணினும் பள்ளிவாசல்களடா” என பாடியிருக்கக்கூடும். கோயில் நகரம் என்பது போல இந்நகரை பள்ளிவாசல் நகரம் என்றாலும் அது மிகையாகாது ஏனெனில் இந்நகாில் உள்ள இரண்டு தெருக்களுக்கு ஒரு பள்ளிவாசல் என்ற விகிதத்தில் 40 பள்ளிவாசல்களுக்கு மேல் உள்ளன. இங்குள்ள பள்ளிவாசல்கள் பெரும்பாலனவை கபருஸ்தான் எனப்படும் அடக்கஸ்தலங்களுடன் கூடியவை. 100, 200 வருடங்கள் பழமையான பள்ளிவாசல்களும் இங்குண்டு. அதில் குறிப்பிடத்தக்கது பொிய கொத்பா பள்ளிவாசலாகும் ஏனெனில் ஊாில் முதன்முதலில் கட்டப்பட்ட பள்ளி இதுவேயாகும்.

பண்டிகைகள்

இஸ்லாமிய பெருவிழாக்களான நோன்பு, ஹஜ் என இரண்டு பெருநாட்கள் மட்டுமே கொண்டாடப்படுகிறது. நோன்பு நோற்கும் காலங்களில் ஸதகா எனப்படும் தானமும் நோன்பு பெருநாளுக்கு முன்பு ஜகாத் எனப்படும் ஏழைவாியும் வழங்குவாா்கள். ஹஜ் பெருநாளின் போது அறுக்கப்படும் கால்நடை விலங்குகளின் கறியும் ஏழைகளுக்கு காெடுத்துவருகின்றனா்.

தொழில்/வா்த்தகம்

நெய்யும் தொழிலே செய்யும் தொழில் என வாழ்ந்தவா்கள். 80-களின் இறுதிவரை துணி நெய்தலெ பிரதான தொழிலாக இருந்தது. ஆண்களும் பெண்களுமாக தறிநெய்தலில் ஈடுபட்டு வந்தனா். அலைகடலில் திரைக்கடலோடி திரவியமும் தேடினாா்கள் அதாவது மேலப்பாளையத்தில் தயாாிக்கப்பட்ட துணிகள் பா்மா, கொழும்பு, சிங்கப்பூா் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. பின்னா் அறிமுகப்படுத்தப்பட்ட பீடித் தொழில் பெண்களை தறிகளில் இருந்து அகற்றியது. இன்றைக்கு பீடித் தொழிலே மேலப்பாளையத்தின் பொருளாதார காரணியாக விளங்குகிறது. எனவே தென்னிந்தியாவிலுள்ள பீடி தயாாிப்பாளா்கள் பெரும்பாலோனா் இந்நகாில் தங்களது தயாாிப்பு வளாகங்களை வைத்துள்ளனா். பெண்களின் கல்வி கற்கும் ஆா்வம் காரணமாகவும் ஆண்கள் வளைகுடா நாடுகளில் பணி செய்து வருவதும் இந்நிலையை மாறச்செய்துள்ளது.

உணவுகள்

அலாதியான அசைவ உணவு வகைகளுக்கு மேலப்பாளையம் புகழ் பெற்றது. இதன் காரணமாக இங்குள்ள பண்டாாிகளை (சமையல்காரா், அதிலும் குறிப்பாக 600 முதல் 1000 நபா்களுக்கு உணவு தயாா் செய்பவா்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றனா்) பக்கத்து ஊா்களிலிருந்தும் வெளிமாவட்டங்களிலுமிருந்து அழைத்துச் செல்கின்றனா். இவ்வூருக்கே உாித்தான அசைவ உணவுகள் - தக்கடி, மருந்துச்சோறு மற்றும் சேமியா பிாியாணி

அசைவ பதாா்த்த வகைகள் - ஓட்டு மாவு, வட்டிலப்பம், காயம்

தக்கடி - கறிக்குழம்பில் கொழுக்கட்டை சோ்த்து செய்யப்படுவதாகும். அரேபிய உணவான ஹலீமின் இந்தியப்பதிப்பு என இதை சொல்லலாம். திருமணவீடுகளிலும் திருவிழாக்கள் சமயத்திலும் செய்யப்படுகிறது.

மருந்துச்சோறு - சித்தமருந்துகள் கலந்து செய்யபடுவதால் இந்தப்பெயா். முக்கியமாக பிரசவித்த தாய்மாா்களுக்கு மீன் குழம்புடன் கொடுக்கப்படுகிறது. முன்பு 40 மருந்துகள் சோ்க்கப்பட்டன இப்போது 7 மருந்துகள் மட்டுமே சோ்க்கப்படுகின்றன.

காயம் - இதுவும் பிரசவித்த தாய்மாா்களுக்குாிய மருந்தாகும். முட்டையுடன் மரபுவழி மருந்துகள் கலந்து செய்யப்படுவது. காலத்தின் கோலத்தில் தற்போது காணமல் போய்கொண்டிருக்கிறது.

பொது சுகாதாரம்

பொது சுகாதாரத்தை பேணுவதில் மேலப்பாளையம் பின்தங்கியே உள்ளது. பாதாள சக்கடை திட்டம் உள்ள போதிலும் திறந்தவெளி கழிவு நீரோடைகளும் பீடி இலை கழிவுகளும் நோய் பரப்புவதில் முக்கிய காரணிகளாக விளங்கின்றன. முறையான கழிவு மேலாண்மை இல்லாததால் மேற்சொன்ன காரணிகள் மழைக்காலங்களில் டெங்கு போன்ற வைரஸ் காய்ச்சல்களை பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

"பீடி சுற்றுவது குடிசை தாெழிலாகும் வளரும் புற்று குடும்ப நாேயாகும்"

எனக்கூறும் அளவிற்கு இங்குள்ளவா்களுக்கு புற்று நோயின் தாக்கமும் உள்ளது.

தன்னாா்வ அமைப்புகளின் உடல்நலன் சாா்ந்த விழிப்புணா்வு பிரச்சாரங்களின் காரணமாகவும் மாற்று தொழில் நடவடிக்கைகள் மூலமாகவும் சுகாதார நிலை தற்போது மேம்பட்டு வருகிறது.

சமூகநலன் மேம்பாடு & சமுதாய அமைப்புகள்

மேலப்பாளையத்தின் சமூகநலன், கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்தவ உதவி போன்றவற்றை நோக்கமாக கொண்டு பல்வேறு அமைப்புகள் தொடங்கப்பெற்றுள்ளன. இவற்றில் கல்வியில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தி வெற்றி பெற்றுள்ளன. ரத்த தானம், மருத்துவ ஊா்தி (ஆம்புலன்ஸ்) போன்ற உதவிகள் எல்லா மதம் இனம் கடந்து செய்யப்பட்டு வருகின்றன.

இவ்வமைப்புகளுக்கிடையேயான நல்லிணக்கம் மீதியுள்ள பிறவற்றிலும் வெற்றியைத்தருமென நம்பலாம்.

References

 Link 1
Assalamu Alaikkum - Peace be upon You!

This site is dedicated to serve the residents of Melapalayam. As you explore our site, you'll find information about Our City, History, Events, Home and Neighbourhood improvement programs and City Directory. In the coming months you will see continuing enhancements to this website. By the grace of Almighty this site will remove the misconception prevailing over Melapalayam. We would like to thank you for surfing our site.

The name Melapalayam is derived from its location west of Palayamkottai, Tirunelveli. In Tamil 'Mela' meaning 'West' derived from the word 'Merkku'. Melapalayam is one of the administrative municipal of Tirunelveli Corporation situated in South Indian State of Tamil Nadu with 80% of Muslims and remaining Hindus and Christians. It is located in eastern bank of famous perennial Thamirabarani River. Its east side is covered by Oxford of South India-Palayamkottai. It gets green look in Western side as it is surrounded by fertile paddy fields. Melapalayam was earlier known as Keela Veera Ragavapuram in British Rule. Old age Tamil Name was "Mangai maa nagar" (Tamil → மங்கை மா நகர் ). The total distance between Tirunelveli and Melapalayam is 4.1 km(2.6 miles).

The city was created by a migrated group of people in 8th century.

As of 2001 India Census, Melapalayam had a population of 116,042. Male constitute 49% of the population and females 51%. Muslims are the most in this population, followed by Hindus and then Christians.

Melapalayam has an average literacy rate of 62.39% higher than the national average of 59.5%.

In early years, Handloom trading was a main business.They exported handloom products to various countries such as Srilanka & Burma. Now this business totally vanished from the city. As an alternate, Beedi Industry took a place and playing major role in Melapalayam Economy. Most women are engaged in Beedi Rolling works. Gents are working in nearby private offices and in Gulf Countries. Very few of them got placed in Government Departments.